உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பள்ளிப்பட்டில் கருப்பு உளுந்து அறுவடை தீவிரம்

பள்ளிப்பட்டில் கருப்பு உளுந்து அறுவடை தீவிரம்

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு பகுதியில் உருவாகும் கொசஸ்தலை ஆறு, புண்ணியம், பெருமாநல்லுார் உள்ளிட்ட பகுதி வழியாக பாய்ந்து செல்கிறது. இதனால், பள்ளிப்பட்டு ஒன்றியத்தில், கொசஸ்தலை கரையோர கிராமங்களில் விவசாயம் செழிப்பாக நடந்து வருகிறது. இது தவிர மற்ற உள்ளடங்கிய கிராமங்களில், மணல் பாங்கான மேட்டு நிலங்களில் மானாவாரி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.இந்த மேட்டு நிலங்களில், துவரை, உளுந்து உள்ளிட்டவை விதைக்கப்படுகின்றன. பள்ளிப்பட்டு பகுதியில் கருப்பு உளுந்து சிறப்பாக விளைகிறது. தற்போது கருப்பு உளுந்து மற்றும் துவரை அறுவடை நடந்து வருகிறது. உளுந்து தனியே பிரித்தெடுக்க இயந்திரங்கள் வாடகைக்கு அமர்த்தப்படுகின்றன.ஆந்திர மாநிலம், நகரியில் இருந்து, இதற்கான இயந்திரங்கள் வாடகைக்கு கொண்டு வரப்படுகின்றன. ஒரு மணி நேரத்திற்கு, 1,300 ரூபாய் வாடகை என, இயந்திரங்களுக்கு கூலி வழங்கப்படுகிறது. ஒரு கிலோ, கருப்பு உளுந்து தற்போது, 80 - 85 வரை விற்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ