புகார் பெட்டி
சேதமான மின்கம்பம் சீரமைக்கப்படுமா?திருவாலங்காடு ஊராட்சி சக்கரமநல்லூர் கிராமத்தில் அரசு பள்ளிக்கு செல்லும் சாலையில் அமைந்துள்ள மின்கம்பம் சேதமடைந்து உள்ளது. இந்த மின்கம்பத்தில் அடிபாகம் முழுதும் சேதமடைந்து சிமென்ட் பூச்சு உதிர்ந்து கம்பி உடைந்துள்ளது. காற்று வேகமாக வீசினால் மின்கம்பம் விழும் என்ற அபாய நிலை உள்ளது. எனவே மின்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சேதமடைந்த மின் கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ஏ.திலீப்குமார், சக்கரமநல்லூர்.கழிவுநீர் கால்வாய்சீரமைக்க வேண்டும் திருவாலங்காடு ஒன்றியம் மணவூர் ஊராட்சியில், ரயில் நிலைய சாலை, விநாயகர் கோவில் தெரு பொன்னி அம்மன் கோவில் தெருவில் வசிக்கும், 250 வீடுகளில் சேகரமாகும் கழிவுநீர் செல்ல, 2006ம் ஆண்டு கால்வாய் கட்டப்பட்டது.தற்போது அந்த கால்வாயில் பல இடங்களில் சேதமடைந்தும் கழிவுநீர் தேங்கியும் துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே சேதமடைந்த கால்வாயை ஒன்றிய நிர்வாகம் சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.- வி.பரத்வாஜ், மணவூர்.துர்நாற்றத்தால் மக்கள் அவதிதிருத்தணி நகராட்சி முருகப்பநகர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இப்பகுதியில் இருந்து செல்லும் கழிவுநீர் கால்வாயில் இருந்து வெளியேறாமல் பல மாதங்களாக முருக்கப்பநகர் பகுதியில் குளம் போல் தேங்கியுள்ளது.இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. மேலும் சுகாதார சீர்கேடும் உள்ளதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தேங்கிய கழிவுநீரை அகற்ற வேண்டும் என நகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. கழிவுநீரை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.செல்வம், திருத்தணி.