உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / காந்தி பிறந்த நாள் பேச்சு போட்டி

காந்தி பிறந்த நாள் பேச்சு போட்டி

திருவள்ளூர்:காந்தி பிறந்த நாளை முன்னிட்டு, வரும் 11ல், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி நடக்கிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:அக்., 2 காந்தி பிறந்த நாள் முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு, வரும் 11ல் பேச்சு போட்டி நடக்கிறது. கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும் பேச்சு போட்டியில், முதல் மூன்று இடங்கள் பெறுவோருக்கு, முறையே 5,000, 3,000, 2,000 ரூபாய் வழங்கப்படும்.மேலும், அரசு பள்ளி மாணவர்கள் இருவருக்கு சிறப்பு பரிசாக, தலா 2,000 ரூபாய் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்போரை, பள்ளி தலைமையாசிரியர், கல்லுாரி முதல்வர்கள் தேர்வு செய்து, gmail.comஎன்ற இ-மெயிலில் வரும் 9க்குள் அனுப்பி வைக்கவும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ