விவசாயிகளுக்கான நல்ல திட்டங்கள் அறிவிக்கப்படும்: அமைச்சர் பன்னீர்செல்வம்
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், வேளாண்மை உழவர் நலத்துறை மண்டல வாரியான 2025 -- -26 வேளாண்மைக்கான தனி நிதி நிலை அறிக்கை கருத்து கேட்புக் கூட்டம், திருவள்ளூரில் நடந்தது.தமிழ்த்தாய் வாழ்த்து இல்லாமல் துவங்கப்பட்ட இந்த கூட்டத்தில், திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் தலைமையேற்று வரவேற்புரை நிகழ்த்தினார்.சிறப்பு அழைப்பாளராக வேளாண் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், கதர் மற்றும் வனத்துறை அமைச்சர் பொன்முடி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் நாசர் ஆகியோர் பங்கேற்றனர்.வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் பேசியதாவது:தமிழக முதல்வர் உத்தரவின்படி, நடந்த இந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில், திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய எட்டு மாவட்டங்களைச் சார்ந்த விவசாயிகள் பங்கேற்று, அவர்களது சார்பில் 27 விவசாயிகள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர்.இந்த கருத்து கேட்பில் விவசாயிகள் வைத்த கோரிக்கைகளை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று விவசாயிகளுக்கு பயன்பெறும் வகையில் நல்ல திட்டங்களை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.கருத்து கேட்பு கூட்டத்தில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர் தட்சிணாமூர்த்தி, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை ஆணையர் ஆபிரகாம், வேளாண்மை துறை இயக்குநர் முருகேஷ், தோட்டக்கலை மற்றும் மழை பயிர்கள் துறை இயக்குநர் குமரவேல்பாண்டியன், சர்க்கரைத் துறை இயக்குநர் அன்பழகன் பங்கேற்றனர்.மேலும், திருவள்ளூர் காங்., - எம்.பி. சசிகாந்த் செந்தில், எம்,எல்.ஏ.,க்கள் - திருவள்ளூர், ராஜேந்திரன் பூந்தமல்லி கிருஷ்ணசாமி, மாதவரம் சுதர்சனம், கும்மிடிப்பூண்டி கோவிந்தராஜன், திருத்தணி சந்திரன், செங்கம் கிரி, கலசபாக்கம் சரவணன், திருப்போரூர் பாலாஜி, மயிலம் சிவகுமார், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி, வேளாண்மை பொறியியல் துறை தலைமை பொறியாளர் ஆர்.முருகேசன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், திருவள்ளுர் வேளாண்மை இணை இயக்குநர் கலாதேவி மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் பிரதிநிதிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.