உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சென்னை வெளிவட்ட சாலை பணி விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

சென்னை வெளிவட்ட சாலை பணி விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

மீஞ்சூர்: மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளி - மாமல்லப்புரம் இடையே, 133 கி.மீ., தொலைவிற்கு, 16,212 கோடியில் சென்னை எல்லை சாலை திட்டத்திற்கான பணிகள் ஐந்து நிலைகளாக மேற்கொள்ளப்படுகின்றன. காட்டுப்பள்ளி - தச்சூர் இடையே, 25.4 கி.மீ., தொலைவிற்கு, 2,122 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் முதல் நிலைக்கான பணிகளை, நேற்று கலெக்டர் பிரதாப் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.இச்சாலையானது, மீஞ்சூர் - வண்டலுார் வெளிவட்ட சாலையுடன் இணைப்பதற்கான பணி மற்றும் ரயில்வே மேம்பால பணிகளையும் பார்வையிட்டு, அதிகாரிகளிடம் விபரங்களை கேட்டறிந்தார்.சென்னை மாநகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், எண்ணுார் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களுக்கு ஏற்றுமதி, இறக்குமதி பொருட்களை துரிதமாக கொண்டு செல்வதற்கு ஏதுவாகவும், சென்னை எல்லை சாலை திட்டப்பணிகள் நடைபெறுவதால், அதை விரைவாகவும், தரமாகவும் மேற்கொள்ள அறிவுறுத்தினார்.பின், தொழிலாளர்கள் தங்கியிருக்கும் இடங்களையும் பார்வையிட்டார். தொடர்ந்து, மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே, மீஞ்சூர் - காட்டூர் மாநில நெடுஞ்சாலையில், ரயில்வே மேம்பாலத்திற்கு இணைப்பு சாலை அமைக்கும் பணிகளை பார்வையிட்டார்.இதையடுத்து, மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், பாதுகாப்பாக பணிகளை மேற்கொண்டு, விரைவாக பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ