உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தேசிய கராத்தே டிராகன் ரியோ சாம்பியன்

தேசிய கராத்தே டிராகன் ரியோ சாம்பியன்

சென்னை: சென்னையில் நடந்த தேசிய அளவிலான கராத்தே போட்டியில், முகப்பேரை சேர்ந்த 'டிராகன் ரியோ' பள்ளி வீரர்கள், 15 தங்கம், 12 வெள்ளி 6 வெண்கலம் வென்று 'கட்டா' பிரிவில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.சென்னை, ஐ.சி.எப்., உயர்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் தேசிய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. அதில், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து சிறுவர் -- சிறுமியர் ஆர்வமுடன் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தினர்.போட்டியில், தமிழகம் சார்பில் முகப்பேரில் உள்ள 'டிராகன் ரியோ' பள்ளியின் வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர். அவர்கள் 'கட்டா' பிரிவில் 15 தங்கம், 12 வெள்ளி, ஆறு வெண்கலம் என, மொத்தம் 33 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். அத்துடன், 'கட்டா' பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை அப்பள்ளி அணி தட்டிச் சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி