உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மின்சாரம் தாக்கி பெயின்டர் பலி

மின்சாரம் தாக்கி பெயின்டர் பலி

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், பழையனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார், 38. பெயின்டராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 4ம் தேதி புளியங்குண்டாவில் புதிய கட்டட பணி பெயின்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. இதில் அவர் துாக்கி வீசப்பட்டார்.அருகே இருந்தவர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் உயிரிழந்தார். திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ