உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கிடப்பில் போடப்பட்ட சாலை பணிகள் லட்சுமிபுரத்தில் கிராமவாசிகள் தவிப்பு

கிடப்பில் போடப்பட்ட சாலை பணிகள் லட்சுமிபுரத்தில் கிராமவாசிகள் தவிப்பு

பொன்னேரி:மீஞ்சூர் ஒன்றியம், ஏருசிவன் ஊராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரம் கிராமத்தில், பெருமாள் கோவில் தெரு, உப்பரபாளையம் ஆகிய பகுதிகளில் சிமென்ட் கற்கள் பதித்த சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.இதற்காக, தெருக்களின் இருபுறமும் ஒரு அடி உயரத்திற்கு, கான்கிரீட் கட்டுமானங்கள் அமைக்கப்பட்டன. கான்கிரீட் கட்டுமானங்களுக்கு இடையே உள்ள பகுதியில் மண் நிரப்பி, அதில் சிமென்ட் கற்கள் பதித்து சாலை அமைக்க வேண்டிய நிலையில், அப்பணிகள், ஒராண்டாக கிடப்பில் போடப்பட்டு உள்ளன.ஒவ்வொரு வீட்டின் நுழைவுப் பகுதியிலும், இருக்கும் கான்கிரீட் கட்டுமானத்தால் வாகனங்கள் வீட்டிற்குள் கொண்டு செல்வதற்கும், வெளியில் எடுப்பதற்கும் கிராமவாசிகள் சிரமப்படுகின்றனர்.சாலைப் பணிகளை அரைகுறையாக செய்யப்பட்டு, கிடப்பில் போடப்பட்டதால் கிராமவாசிகள், மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகத்தின் அதிருப்தி அடைந்து உள்ளனர்.அதே போல, இங்குள்ள பெருமாள் கோவில் தெருவில், மழைநீர் செல்வதற்காக கால்வாய் அமைத்து, அதன் மீது மூடி போடாமல் திறந்த நிலையில் விடப்பட்டு உள்ளது.அரைகுறையாக விடப்பட்ட சாலைப் பணிகளை முழுமையாக முடிக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ