உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 100 நாள் வேலை கேட்டு அதிகாரியை முற்றுகையிட்ட பெண்கள்

100 நாள் வேலை கேட்டு அதிகாரியை முற்றுகையிட்ட பெண்கள்

திருத்தணி: திருத்தணி ஒன்றியம் சூர்யநகரம் கிராமத்தைச் சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று மதியம், ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தனர். பின், முதல்மாடியில் உள்ள தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பெண் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அபினா இருக்கைக்கு சென்று, பெண்கள் முற்றுகையிட்டு, ஊராட்சி நிர்வாகம் ஒரு தலைபட்சமாக செயல்படுகிறது என கூறி, சரமாரியாக கேள்விகள் கேட்டனர். பெண் அதிகாரியிடம், 100 நாள் வேலை, ஒரு மாதத்திற்கு ஆறு நாட்கள் மட்டுமே எங்கள் கிராமத்திற்கு வழங்கப்படுகிறது. அதே ஊராட்சி தெக்களூர் காலனி பகுதி தொழிலாளர்களுக்கு மாதத்திற்கு, குறைந்த பட்சம், 18 நாட்கள் தொடர்ந்து ஊராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது.ஒரே ஊராட்சியில் 100 நாள் தொழிலாளர்களுக்கு ஒரு தலைபட்சமாக வேலை வழங்குவதால், எங்களுக்கு வேலை கிடைக்காமல், கடும் அவதிப்படுகிறோம். ஊராட்சியில் அனைத்து 100 நாள் தொழிலாளர்களுக்கும் ஒரே மாதிரியாக வேலை வழங்க வேண்டும் என வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அபினா, தற்போது ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு குறைந்தும், வேலைகளும் குறைவாக வழங்குவதால், சுழற்சி முறையில் வேலை வழங்கப்படுகிறது என, சமாதானம் செய்து அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை