மேலும் செய்திகள்
இன்று இனிதாக (19.10.2024) திருவள்ளூர்
19-Oct-2024
திருத்தணி:திருத்தணி மேட்டுத் தெருவில் உள்ள வீரஆஞ்சநேயர் கோவிலில் நேற்று கார்த்திகை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை ஒட்டி, 108 பால்குட ஊர்வலம் நடந்தது. காலை, 9:00 மணிக்கு பெரியதெருவில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக காலை, 10:30 மணிக்கு ஆஞ்சநேயர் கோவில் வளாகத்திற்கு வந்தது.பின் மூலவருக்கு, பால்குட அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திருத்தணி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று வழிப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.
19-Oct-2024