உங்களுடன் ஸ்டாலின் முகாம் மாவட்டத்தில் 14,842 பேர் மனு
திருவள்ளூர், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில், மாவட்டம் முழுதும் 14,842 பேர் மனு அளித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ், கடந்த 15-ம் தேதி முகாம் துவங்கி, வரும் அக்டோபர் 31ம் தேதி வரை, 389 முகாம் நடைபெற உள்ளது. நகர்ப்புறங்களில் 119, ஊரக பகுதிகளில் 270 முகாம் நடைபெற உள்ளன. முதற்கட்டமாக, ஜூலை 15 - ஆகஸ்ட் 14 வரை, நகர் பகுதியில், 36, ஊரக பகுதியில் 84 என, 120 முகாம் நடைபெற உள்ளது. முகாமில், மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் விடுபட்ட தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், தங்கள் பிரச்னை குறித்து நிவர்த்தி செய்ய, பொதுமக்கள் தங்கள் முகவரிக்குட்பட்ட முகாம் நடைபெறும் நாட்களில் மட்டும் விண்ணப்பம் அளித்து பயனடையலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், மாவட்டம் முழுதும் நடந்த முகாம்களில், தற்போது வரை 14,842 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த மனுக்களின் மீது தீர்வு காண்பதற்காக, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பரிசீலனையில் உள்ளதாக, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் தெரிவித்தார்.