உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 1,900 போதை மாத்திரை பறிமுதல்: 2 பேர் கைது

1,900 போதை மாத்திரை பறிமுதல்: 2 பேர் கைது

குன்றத்துார்: குன்றத்துார் அருகே 1,900 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. குன்றத்துார் அருகே வழுதம்பேடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு குன்றத்துார் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரிந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர். அதில், ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த கால் டாக்சி ஓட்டுநரான நியாஸ் கான், 28, என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து, 400 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. நியாஸ் கான் அளித்த தகவலையடுத்து, அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த அப்துல் சாபிக், 25 என்பவரை பிடித்து, 1500 போதை மத்திரைகள், 400 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து, இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ