உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர்களுக்கு 3 நாள் பயிற்சி

 மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர்களுக்கு 3 நாள் பயிற்சி

திருவள்ளூர்: மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு, மூன்று நாள் பயிற்சி தொடங்கியது. திருவள்ளூர் மாவட்டத்தில், 2027ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. இப்பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு, கலெக்டர் அலுவலகத்தில் மூன்று நாள் பயிற்சி நேற்று தொடங்கியது. இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகத்தின் பயிற்சி அலுவலர்களால், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது தாசில்தார்கள், ஆவடி மாநகராட்சியின் நான்கு மண்டலங்களின் அதிகாரிகள், ஆறு நகராட்சி ஆணை யர்கள், எட்டு பேரூராட்சி செயல் அலுவலர்கள், 14 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அனைத்து பொறுப்பு அலுவலர்கள், கூடுதல் பொறுப்பு அலுவலர்கள், உதவியாளர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்களுக்கு, மூன்று நாள் பயிற்சி நடைபெறவுள்ளது. இப்பயிற்சி வரும் 21ம் தேதி வரை நடைபெறும். பயிற்சியை கலெக்டர் பிரதாப் துவக்கி வைத்து பேசினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், ஆவடி மாநகராட்சி கமிஷனர் சரண்யா, பொன்னேரி சப் - கலெக்டர் அப்துல் ராசிக், வருவாய் கோட்டாட்சியர்கள் ரவிச்சந்திரன் - திருவள்ளூர், கனிமொழி - திருத்தணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை