உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கணவரை கொல்ல முயன்ற மனைவி உட்பட 4 பேர் கைது

கணவரை கொல்ல முயன்ற மனைவி உட்பட 4 பேர் கைது

சோழவரம், கள்ளக்குறிச்சி மாவட்டம், பெருவங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 33; லாரி டிரைவர். இவர், கடந்த மாதம், 29ம் தேதி, சோழவரம் அடுத்த, ஜனப்ப சத்திரம் பகுதியில், வெட்டுக்காயங்களுடன் இருந்தார்.போலீசார் அவரை மீட்டு, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். கருத்து வேறுபாடுவிசாரணையில், ஜனப்ப சத்திரம் பகுதியில் நின்றிருந்த ராமகிருஷ்ணனை, பைக்கில் வந்த கும்பல் ஒன்று வெட்டிவிட்டு தப்பியது தெரிந்தது. அதையடுத்து இதில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வந்தனர்.தொடர் விசாரணையில், ராமகிருஷ்ணன் மனைவி சிவகாமிஸ்ரீ, 24, கூலிப்படையை வைத்து கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரிந்தது.மேலும் விசாரணையில் தெரிய வந்ததாவது:ராமகிருஷ்ணன், 2019ல், அதே பகுதியைச் சேர்ந்த சிவகாமிஸ்ரீயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக, 2021ல், சிவகாமிஸ்ரீ இவரை விட்டு பிரிந்து சென்றார்.பின், விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகி உள்ளார். ராமகிருஷ்ணன் விவாகரத்து தர மறுத்ததுடன், சேர்ந்து வாழ விரும்புவதாக தெரிவித்துள்ளார். இதனால், சிவகாமிஸ்ரீ, ராமகிருஷ்ணன் மீது கோபம் அடைந்தார்.இந்நிலையில், கடந்த மாதம், 29ம் தேதி, ராமகிருஷ்ணன் தான் வேலை பார்க்கும் லாரியின் உரிமையாளரை மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு சென்னை வந்து உள்ளார்.கூலிப்படைஇதையறிந்த சிவகாமி ஸ்ரீ, ராமகிருஷ்ணனை தொடர்பு கொண்டு, நேரில் சந்திக்க வேண்டும் எனக்கூறி, ஜனப்பசத்திரம் பகுதிக்கு வரவழைத்தார்.மனைவியின் பேச்சைக் கேட்டு, அங்கு சென்றபோது, சிவகாமிஸ்ரீ ஏற்பாடு செய்திருந்த கூலிப்படையினர், ராமகிருஷ்ணனை கத்தியால் வெட்டிக் கொலை முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.இவ்வாறு விசாரணையில் தெரிய வந்தது.அதையடுத்து, சோழவரம் போலீசார் நேற்று, ராமகிருஷ்ணன் மனைவி சிவகாமிஸ்ரீ, 24, சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த கூலிப்படையினர், நவீன், 24, கெல்வின்ராஜ், 20, நிதிஷ்ராஜ், 21, ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை