உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / புழல், செம்பரம்பாக்கத்திற்கு பூண்டி நீர் 800 கன அடி திறப்பு

புழல், செம்பரம்பாக்கத்திற்கு பூண்டி நீர் 800 கன அடி திறப்பு

ஊத்துக்கோட்டை:கிருஷ்ணா நீர், மழைநீர் ஆகியவற்றால், முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ள பூண்டி சத்தியமூர்த்திசாகர் நீர்த்தேக்கத்தில் உள்ள இணைப்பு கால்வாய் வழியே, நேற்று காலை முதல், செம்பரம்பாக்கம், புழல் நீர்த்தேக்கங்களுக்கு திறந்து விடப்பட்டு உள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில், கொசஸ்தலை ஆற்றின் நடுவே பூண்டி கிராமத்தில் உள்ள சத்தியமூர்த்திசாகர் நீர்த்தேக்கத்திற்கு தற்போது நீர்வரத்து பகுதிகளில் இருந்து தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.இதனால் மொத்த கொள்ளளவான, 3.23 டி.எம்.சி.,யில், 2.937 டி.எம்.சி., நீர் உள்ளது. மொத்த நீர்மட்டமான, 35 அடியில், 34.86 அடி நீர் உள்ளது.நேற்று, காலை 6:00 மணி நிலவரப்படி, மழைநீர் வினாடிக்கு, 2,100 கன அடி, ஆரணி ஆற்றில் இருந்து சிட்ரபாக்கம் அணைக்கட்டு வழியே, 290 கன அடி என மொத்தம், 2,390 கன அடி நீர் வரத்து உள்ளது.இங்குள்ள இணைப்பு கால்வாய் வாயிலாக, செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்திற்கு, 500 கன அடி, புழலுக்கு, 300 கன அடி என, மொத்தம் 800 கன அடிநீர் திறந்து விடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ