மேலும் செய்திகள்
பைக்குகள் மோதல் வாலிபர் பலி
30-May-2025
ஊத்துக்கோட்டை:பெரியபாளையம் மேட்டுத் தெருவில் வசித்து வருபவர் சுரேந்தர்; மின்வாரிய ஊழியர். இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவரது மகன் பரத், 13, மாதா கோவில் தெருவில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு, அங்குள்ள துரித உணவகத்தில், சிக்கன் ரைஸ் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இரவு தூங்கி கொண்டு இருந்த போது, திடீரென பரத் வாந்தி எடுத்துள்ளார். உடனடியாக, பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.பெரியபாளையம் போலீசார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்ககாக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.இதுகுறித்து தகவல் அறிந்த எல்லாபுரம் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், பெரியபாளையம் பஜாரில் உள்ள துரித உணவுக் கடையில் ஆய்வு மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
30-May-2025