உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஓடையை கடக்க மேம்பாலம் தடை இல்லாத போக்குவரத்து

ஓடையை கடக்க மேம்பாலம் தடை இல்லாத போக்குவரத்து

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த, ஞானகொல்லிதோப்பு அருகே ஓடை பாய்கிறது. இந்த ஓடைக்கு, ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் ஏரியின் உபரிநீர் வாயிலாக நீர்வரத்து உள்ளது.இந்த ஓடையின் குறுக்கே தரைப்பாலம் இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் பெய்த கனமழையின் போது இந்த தரைப்பாலம் வெள்ளத்தில் மூழகியது.இதனால், கொண்டாபுரத்தில் இருந்து, வீராணத்துார் வழியாக சோளிங்கருக்கான போக்குவரத்து தடைபட்டது. மேலும், இந்த தரைப்பாலத்தில் வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் போலீசார் இங்கு தொடர்ந்து காவலில் இருந்து வந்தனர்.இதையடுத்து, இந்த தரைப்பாலத்தை மேம்பாலமாக தரம் உயர்த்த நெடுஞ்சாலைத் துறையினர் திட்டமிட்டனர். அதன்படி, நபார்டு திட்டத்தின்கீழ், 6.98 கோடி ரூபாய் மதிப்பில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டது. 2023ல் துவங்கிய பணி கடந்த மார்ச் மாதம் நிறைவடைந்தது.தற்போது, ஞானகொல்லிதோப்பு ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்ந்துவரும் நிலையில், மேம்பாலம் வழியாக பகுதிவாசிகள் தடையின்றி பயணித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ