உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சிற்றுண்டி ஏற்றிச்சென்ற வேன் மின் கம்பத்தில் மோதி விபத்து

சிற்றுண்டி ஏற்றிச்சென்ற வேன் மின் கம்பத்தில் மோதி விபத்து

திருத்தணி, அரசு பள்ளிகளுக்கு காலை சிற்றுண்டி ஏற்றிச் சென்ற வேன், சாலையோர மின்கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.திருத்தணி நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் இயங்கி வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, நகராட்சி நிர்வாகம் மூலம் காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது. இதற்காக பெரியார் நகர், அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் சிற்றுண்டி தயாரித்து, இரு வேன்கள் மூலம் அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.நேற்று காலை முருக்கப்ப நகரில் இயங்கி வரும் அரசு நடுநிலைப் பள்ளிக்கு சிற்றுண்டி ஏற்றிச் சென்ற வேன், ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து, முருக்கப்ப நகர் சாலையோரம் இருந்த மின்கம்பத்தின் மீது மோதியது.இதில், மின்கம்பம் உடைந்து வேன் மீது விழுந்தது. தகவல் அறிந்ததும், மின் ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின்சாரத்தை துண்டித்து, உடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிதாக நடப்பட்டு மின் வினியோகம் செய்யப்பட்டது.இந்த விபத்தில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ