உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கால்வாய் பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து

கால்வாய் பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து

திருவள்ளூர்:திருவள்ளூர் அருகே காக்களூர் ஏரியின் நீர் வரத்து கால்வாயில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியிலிருந்து 21 குவிண்டால் எண்ணெய் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. வேலுார் பகுதியைச் சேர்ந்த விஜய், 34. என்பவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். நேற்று அதிகாலை திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியில் சென்னை செல்லும் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது காக்களூர் கூட்டுச்சாலை அருகே வந்தபோது ஓட்டுநர் லாரியை ரிவர்ஸ் எடுத்துள்ளார். இதில் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் காக்களூர் ஏரியின் வரத்து கால்வாய்க்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் ஓட்டுநர் உயிர் தப்பினார்.தகவலறிந்த திருவள்ளூர் தாலுக்கா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து கிரேன் மூலம் விபத்துக்குள்ளான லாரியை மீட்டனர்.இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை