உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / விளையாட்டு திடல்கள் கண்துடைப்பா? ஊராட்சிகளில் வீணடிக்கப்பட்ட நிதி

விளையாட்டு திடல்கள் கண்துடைப்பா? ஊராட்சிகளில் வீணடிக்கப்பட்ட நிதி

பொன்னேரி:ஊராட்சிகளில் நுாறு நாள் வேலைதிட்டத்தின் கீழ், கண்துடைப்பிற்காக விளையாட்டு திடல்கள் அமைக்கப்பட்டு, அவை பயனின்றி கிடப்பதுடன், அதற்காக செலவிட்ட நிதியும் வீணாகி வருகிறது.மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 55 ஊராட்சிகளில், கிராமப்புற இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்துவதற்காக, அரசு நிலங்களில் விளையாட்டு திடல்கள் அமைக்கப்பட்டன.இங்கு வாலிபால், டென்னிஸ், கூடைப்பந்து உள்ளிட்டவை விளையாடுவதற்காக தளம் அமைக்கப்பட்டன. இதற்காக, ஒவ்வொரு ஊராட்சியிலும் 1 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. நுாறு நாள் திட்ட பணியாளர்களை கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.இவை முறையாக அமைக்காமல் கண்துடைப்பிற்காக, ஊருக்கு ஒதுக்குப்புறமான காலி இடங்களில், தரமற்ற கான்கிரீட் கட்டுமானங்களால் ஏற்படுத்தப்பட்டன.தற்போது, இவை சேதமடைந்தும், பயன்பாடின்றியும் உள்ளன. சரியான திட்டமிடல் இல்லாமலும், தரமின்றியும், ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களில் அமைக்கப்பட்டதாலும், இதற்கு செலவிட்ட நிதி வீணடிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:கிராமங்களில் இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்த திட்டம் வகுக்கப்பட்டது வரவேற்கத்தக்கது தான். ஆனால், அதை முறையாக செய்யவில்லை. கட்டுமானங்கள் தரமின்றி, கண்துடைப்பிற்கும், கணக்கு காட்டவும் கட்டப்பட்டு உள்ளன.மக்களின் வரிப்பணம் வீணடிக்காமல், சரியான திட்டமிடலுடன் திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை