விவசாயி மீது தாக்குதல்
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த சி.ஜி.என்.கண்டிகையை சேர்ந்தவர் பூபாலன், 40. விவசாயியான இவருக்கும், இவரது அண்ணன் பத்மாநாபன், 50, என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது. நேற்று முன்தினம் பூபாலன் அவரது வயல்வெளியில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரது பத்மநாபன், அவரது மகன்கள் கோபி, 27, அரிகிருஷ்ணன், 24, ஆகியோர், பூபாலனை தாக்கினர். இதில், படுகாயம் அடைந்த பூபாலன் சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.