உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குட்கா கடத்திய ஆட்டோ பறிமுதல்

குட்கா கடத்திய ஆட்டோ பறிமுதல்

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே, ஆட்டோ மூலம் ஆந்திராவில் இருந்து, 20 கிலோ குட்கா கடத்திய நபரை, போலீசார் கைது செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்தனர். கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே, பல்லவாடா கிராமத்தில், போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆந்திராவில் இருந்து மாதர்பாக்கம் நோக்கி சென்ற ஆட்டோ ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், 20 கிலோ குட்கா பாக்கெட்டுகள் சிக்கின. வழக்கு பதிந்த பாதிரிவேடு போலீசார், குட்கா கடத்திய ஆட்டோ ஓட்டுநரான, சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்த முனீஸ்வரன், 42, என்பவரை கைது செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !