விளையாட்டு வீரர்களுக்கு பரிசளிப்பு
திருத்தணி: திருத்தணி நகர தி.மு.க., சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, இளைஞர்கள் இடையே, கபடி, வாலிபால், கிரிக்கெட், கேரம் போர்டு உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்று விளையாடினர். இதில், சிறப்பாக விளையாடி முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு, திருத்தணி நகர செயலர் வினோத்குமார், 30 வகையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கியும், ரொக்கப் பரிசும் வழங்கினார்.