உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / உண்டியல் வசூல் ரூ.1.75 லட்சம்

உண்டியல் வசூல் ரூ.1.75 லட்சம்

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் பேரம்பாக்கம் அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது, மரகத வல்லி சமேத லட்சுமி நரசிம்மர் கோவில். இக்கோவில் மூலவர் நரசிம்மர், தாயாரை மடி மீது அமர்த்தி, அணைத்த கோலத்தில், 7.5 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சி அளிக்கிறார்.நினைத்த காரியம் கைகூட இங்கு மூலவரை தரிசிக்க சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் வந்து தரிசனம் செய்து, உண்டியலில் காணிக்கை செலுத்துகின்றனர்.அந்த வகையில், உண்டியல் காணிக்கை நேற்று கோவில் வளாகத்தில் செயல் அலுவலர் பிரகாஷ் முன்னிலையில், ஹிந்து சமய அறநிலையத்துறை திருவள்ளூர் ஆய்வாளர் கலைவாணன் தலைமையில் கோவில் ஊழியர்கள் எண்ணினர். இதில், 1,75,879 ரூபாய் இருந்தது என, செயல் அலுவலர் தெரிவித்தார்.உண்டியல் காணிக்கை எண்ணும் போது, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகனசுந்தரம் மற்றும் உறுப்பினர்கள் தேவராஜ், அம்சா ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை