மேலும் செய்திகள்
மின்சாரம் தாக்கி சிறுவன் பலி
25-Sep-2024
திருவள்ளூர் : திருவள்ளூர் அடுத்த நெமிலியகரம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிபாபு, 47. இவரது மகன், தீபக்குமார், 14 அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தான்.நேற்று முன்தினம் மாலை தீபக்குமார் வீட்டில் அயர்ன் பாக்ஸ் மூலம் துணிகள் அயர்ன் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி கீழே விழுந்தவரை விடையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அங்கு பரிசோதனை செய்த மருத்துவர், சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து ஹரிபாபு கொடுத்த புகாரின்படி திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
25-Sep-2024