உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அண்ணனை வீடு புகுந்து தாக்கிய தம்பி கைது

அண்ணனை வீடு புகுந்து தாக்கிய தம்பி கைது

ஆர்.கே.பேட்டை,:அண்ணனை தாக்கிய சகோதரர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர். ஆர்.கே.பேட்டை அடுத்த ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் ரமேஷ், 45. இவருக்கும், இவரது சகோதரர்கள் சுரேஷ் மற்றும் தங்கராஜ் ஆகியோருக்கும் இடையே, கருத்து வேறுபாடு உள்ளது. இதனால், அடிக்கடி இவர்களுக்குள் சண்டை நடந்து வந்தது. நேற்று முன்தினம், அவரது வீட்டில் இருந்த ரமேஷை, அவரது சகோதரர்கள் வீடு புகுந்து தாக்கினர். அதை தடுக்க வந்த ரமேஷின் மனைவி உமாவையும் தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த ரமேஷ், சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து விசாரணை மேற்கொண்ட ஆர்.கே.பேட்டை போலீசார், சுரேஷை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள தங்கராஜை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ