புகார் பெட்டி வாகன பார்க்கிங் ஆக மாறிய பஸ் நிலையம்
ஊத்துக்கோட்டை பேருந்து நிலையத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பயணியரை ஏற்றிச் செல்ல சென்று வருகின்றன. இடப்பற்றாக்குறையால் பேருந்துகள் நிறுத்த முடியாத நிலையில், தனியார் கார், வேன், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.இதனால், அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுனர்கள், பயணியர் அச்சம் அடைந்துள்ளனர்.- வி.லட்சுமணன், ஊத்துக்கோட்டை.பயணியர் நிழற்குடைஅமைக்கப்படுமா?திருத்தணி - சோளிங்கர் மாநில நெடுஞ்சாலை, கோரமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து, தினமும் நுாற்றுக்கணக்கான பயணியர் திருத்தணி மற்றும் சோளிங்கர் மார்க்கத்தில் செல்லும் பேருந்துகளில் சென்று வருகின்றனர். இந்நிலையில், கோரமங்கலம் ஊராட்சி நிர்வாகம், சோளிங்கர் மார்க்கத்தில் பேருந்து ஏறிச் செல்லும் பயணியருக்கு மட்டும் நிழற்குடை அமைக்கப்பட்டது.அதே நேரத்தில், திருத்தணி மார்க்கத்தில் பயணியர் செல்வதற்கு நிழற்குடை இதுவரை அமைக்கப்படவில்லை. இதனால், பயணியர் மழையில் நனைந்தும், பேருந்து வரும் வரை காத்திருந்து செல்ல வேண்டியுள்ளது.எனவே, ஒன்றிய நிர்வாகம், பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க வேண்டுகிறேன்.- எஸ்.பாலசந்தர்,கோரமங்கமலம்.பயன்பாட்டில் இல்லாத சமையல் கூடம் இடிக்கப்படுமா?திருத்தணி ஒன்றியம், கன்னிகாபுரம் கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில், 20 ஆண்டுகளுக்கு முன் சமையல் அறை கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு விடப்பட்டது.ஒன்றரை ஆண்டுக்கு முன் சமையல் கூடம் பழுதடைந்ததால், ஊராட்சி நிர்வாகம் புதிய சமையல் கூடம் கட்டி பயன்பாட்டிற்கு விடப்பட்டது.ஆனால், பழுதடைந்த சமையல் கூடம் அகற்றப்படாமல் உள்ளன. மதிய உணவு இடைவெளியின் போது, பழுதடைந்த சமையல் கூடம் அருகே சென்று மாணவர்கள் விளையாடுகின்றனர்.எனவே, பயன்பாட்டில் இல்லாத சமையல் கூடத்தை இடித்து அகற்ற வேண்டுகிறேன்.- ஆர்.துரைவேல், கன்னிகாபுரம்.