பஸ் கண்ணாடி உடைப்பு
திருத்தணி, செப். 26– திருத்தணி செட்டித் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன், 29. இவர், நேற்று முன்தினம் தனியார் பேருந்து மோதியதில், சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்நிலையில், நேற்று மாலை மணிகண்டனின் இறுதி ஊர்வலம் நடந்தது. அப்போது, எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த ரமேஷ், 40, என்பவர், மதுபோதையில், எதிரே வந்த தனியார் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை, கல்லால் அடித்து உடைத்தார். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.