உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரசு மருத்துவமனையில் புற்றுநோய் விழிப்புணர்வு

அரசு மருத்துவமனையில் புற்றுநோய் விழிப்புணர்வு

திருவள்ளூர்:தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனை, 'பிங்க்' நிற விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் ஆண்டு தோறும் நவ.7ல் அனுசரிக்கப்படுகிறது. இதில், புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், அதனை கண்டறிதல், சிகிச்சை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சுகாதார துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்து வருகிறது. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்ட மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், 'பிங்க்' நிற விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, இரவு நேரத்தில் ஜொலிக்கிறது.பொதுமக்களுக்கு புற்று நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஒரு மாதம் முழுதும், இரவு நேரத்தில், அரசு மருத்துவமனை வளாகம், 'பிங்க்' நிற விளக்குகள் ஜொலிக்கும் என, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ