உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கேரம்: அரையிறுதியில் மணிகண்டன், அப்துல் வாஹிப்

கேரம்: அரையிறுதியில் மணிகண்டன், அப்துல் வாஹிப்

சென்னை, சென்னை மாவட்ட அளவில் நடக்கும் கிளப் கேரம் போட்டியின் ஆடவர் பிரிவு அரையிறுதிக்கு, மணிகண்டன், அப்துல் வாஹிப், ஸ்ரீனிவாசன் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். சென்னை கேரம் சங்கம் சார்பில், சென்னை மாவட்ட கிளப்களுக்கு இடையே கேரம் சாம்பியன்ஷிப் போட்டி, சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடந்து வருகிறது. இதில், சென்னை மாவட்டத்தின் சிறந்த கிளப் அணிகள் போட்டியிடுகின்றன. அந்த வகையில் லீக் சுற்றுகள் நிறைவு பெற்று, நேற்று முன்தினம் காலிறுதி போட்டிகள் நடந்தன. இதன் ஆடவர் பிரிவு காலிறுதி முதல் போட்டியில், பி.எஸ்.சி.ஏ., கிளப்பின் மணிகண்டன், ஒய். ஜி.சி., அணியின் டோஷி ராஜன் மோதினர். இதில், மணிகண்டன், 25 -- 14, 25 -- 0 என்ற புள்ளிகளில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார். அடுத்த போட்டியில், சி.என்.சி.சி.சி., அணியின் அப்துல் வாஹிப், ஜி.சி.சி.சி., அணியின் நந்தகுமாரை, 12 -- 25, 19 - - 4, 25 - - 14 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார். அடுத்த போட்டியில், சி.சி.சி., கேரம் கிளப்பின் ஸ்ரீனிவாசன், ஏ.பி.ஜே., கேரம் கிளப்பின் சங்கீத்தை, 10 -- 25, 19 -- 13, 19 -- 08 என்ற புள்ளிகளில் வீழ்த்தி, அரையிறுதிக்கு தகுதி பெற்றார். மகளிர் ஒற்றையர் பிரிவில், ஐ.டி.ஆர்.சி., அணியின் நாகஜோதி, எஸ்.ஹரிணியை, 23 -- 06, 23 - - 20 என்ற புள்ளிகளில் வீழ்த்தி வெற்றியை பதிவு செய்தார். அடுத்த போட்டியில் கீர்த்தனா, சி.என்.சி.சி., கேரம் அணியின் காசிமாவை, 14 -- 13, 25 -- 10 என்ற புள்ளியில் வீழ்த்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை