உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கோவில் ஊழியர்கள் மீது தாக்குதல் சென்னை வாலிபர்களிடம் விசாரணை

கோவில் ஊழியர்கள் மீது தாக்குதல் சென்னை வாலிபர்களிடம் விசாரணை

திருத்தணி:முருகன் மலைக்கோவிலில், உற்சவர் சன்னிதியில் பணியில் இருந்த இரண்டு கோவில் ஊழியர்களை தாக்கிய, தரிசனத்திற்கு வந்த சென்னையைச் சேர்ந்த இரு வாலிபர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். திருத்தணி முருகன் கோவிலுக்கு, தினமும் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில், நேற்று மாலை சென்னை வடபழனியைச் சேர்ந்த இளங்கோ, 22, ஸ்ரீராம், 24, ஆகியோர், முருகன் மலைக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். பின், மூலவர், வள்ளி, தெய்வானை ஆகிய சன்னிதிகளில் தரிசனம் முடிந்த பின், உற்சவர் முருகர் சன்னிதிக்கு வந்தனர். அப்போது, அங்கிருந்த கோவில் ஊழியர்கள் பாலாஜி, ரமேஷ் ஆகியோர், தங்களுக்கு வேண்டிய பக்தர்களை உற்சவர் சன்னிதியின் உள்ளே அனுப்பி, தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது, இளங்கோ, ஸ்ரீராம் ஆகியோர், எங்களையும் உற்சவர் சன்னிதிக்குள் அனுமதிக்குமாறு, பாலாஜி, ரமேஷிடம் வாக்குவாதம் செய்தனர். இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் அதிகரித்தது. அதனால் ஆத்திரமடைந்த இளங்கோ, ஸ்ரீராம் இருவரும், கோவில் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தினர். தடுக்க வந்த ஒரு கோவில் குருக்களை தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு வந்த போலீசார், கோவில் ஊழியர்களை தாக்கிய இளங்கோ, ஸ்ரீராம் ஆகியோரை, திருத்தணி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை