உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சுண்ணாம்புகுளத்தில் மீன் இறங்குதளம் காணொலி வாயிலாக முதல்வர் திறப்பு

சுண்ணாம்புகுளத்தில் மீன் இறங்குதளம் காணொலி வாயிலாக முதல்வர் திறப்பு

கும்மிடிப்பூண்டி,கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சுண்ணாம்புகுளம் மீனவ கிராமத்தில், மீனவர்கள் சிரமமின்றி கடலுக்கு சென்று வரவும், படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்கவும், மீன்களை சுகாதாரமான முறையில் கையாளவும், மீன் இறங்குதளம் நிறுவ வேண்டும் என, மீனவர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், 8 கோடி ரூபாய் மதிப்பில் சுண்ணாம்புக்குளம் கிராமத்தில் மீன் இறங்குதளம் நிறுவப்பட்டது. இதை, காணொலி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.சுண்ணாம்புகுளத்தில் நடந்த திறப்பு விழாவில், திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி., சசிகாந்த் செந்தில், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ., கோவிந்தராஜன் உள்ளிட்டோர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை