உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தினமலர் செய்தியை சுட்டிக் காட்டி விவசாயிகள் நலன் கூட்டத்தில் புகார்

தினமலர் செய்தியை சுட்டிக் காட்டி விவசாயிகள் நலன் கூட்டத்தில் புகார்

திருத்தணி:திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், வருவாய் கோட்டாட்சியர் தீபா தலைமையில் நடந்தது.இதில், திருத்தணி கால்நடை துறை உதவி இயக்குனர் தாமோதரன், வருவாய் கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் ராமன், தாசில்தார் மலர்விழி உட்பட துறை அதிகாரிகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுவாக கொடுத்தனர்.பின், லிங்கமூர்த்தி என்ற விவசாயி, 'தினமலர்' நாளிதழில் 'திருத்தணியில் ஏரிகளை பராமரிப்பதில் சிக்கல்; 3 ஆண்டுகளாக நிதி ஒதுக்கீடு நிறுத்தம்' என செய்தி வெளியானது.உண்மையிலேயே ஏரிக்கு நீர்வரத்து கால்வாய் பெரும்பாலான இடங்களில் காணாமல் போய் உள்ளன. சில இடங்கள் கால்வாய் புதைந்துள்ளன. எனவே, ஏரிகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என, வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் தெரிவித்தும் மனு கொடுத்தார்.தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் வேணுகோபால், ஊராட்சிகளில், நுாறு நாள் வேலை உறுதி திட்டத்தில், பணிதள பொறுப்பாளர்கள், நுாறு நாட்களுக்கு மட்டும் பணியாற்ற வேண்டும். பின், சுழற்சி முறையில் பணிதள பொறுப்பாளர்கள் நியமிக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான ஊராட்சிகளில் ஒருவரே மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணிதள பொறுப்பாளராக பணியாற்றுவதால், நிறைய முறைகேடுகள் நடக்கின்றன. அதாவது, போலி நுாறு நாள் அட்டைகள் வைத்து, பணம் பெறுகிறார்கள்.மேலும், நகரி - திண்டிவனம் புதிய ரயில் பாதைக்கு நிலம் வழங்கிய விவசாயிகளின் நிலத்தை பட்டா பிரித்து கொடுக்காததால் விவசாயிகள் தங்களது நிலத்தை விற்பதற்கும், பயிரிடுவதற்கும் முடியாமல் தவிக்கின்றனர். மேலும், விவசாயிகள் பட்டா பெயர் மாற்றம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர் என, புகார் தெரிவித்தார்.வருவாய் கோட்டாட்சியர் தீபா, 'ஒரு மாதத்திற்குள் அந்த பிரச்னை தீர்க்கப்படும்' என, உறுதி அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ