புகார் பெட்டி
சாலையோரம் குவியும் குப்பை திருமழிசை பேரூராட்சியிலிருந்து காவல்சேரி வழியாக பூந்தமல்லி செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் எல்.டி.எம். ,நகர் போன்ற 10க்கும் மேற்பட்ட நகர்கள் உள்ளன. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு எல்.டி.எம்., நகர் பூங்கா எதிரே நெடுஞ்சாலையோரம் இப்பகுதி மக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் கொட்டப்படும் குப்பை குவிந்து வருகிறது. இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால் பகுதி மக்கள் மற்றும் இவ்வழியே வாகனங்களில் செல்வோர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம் இப்பகுதியில் குப்பையை தினமும் அகற்ற வேண்டும். - எம்.மாரியப்பன், திருமழிசை. -------------------------------------------