உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலையோரம் குப்பை கொட்டி எரிப்பதால் சுவாச பிரச்னை

சாலையோரம் குப்பை கொட்டி எரிப்பதால் சுவாச பிரச்னை

திருத்தணி நகராட்சி, என்.எஸ்.சி.போஸ் சாலையில், அதிகாலை 5:00 மணி முதல், நள்ளிரவு 11:00 மணி வரை மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும். இந்நிலையில், நகராட்சி துப்புரவு ஊழியர்கள் சிலர், சேகரிக்கும் குப்பையை சாலையோரம் கொட்டி, தீ வைத்து எரிக்கின்றனர். இதனால், தீ மளமளவென எரிந்து, புகைமூட்டம் பரவுவதால், நடந்து செல்லும் மக்கள் சுவாச பிரச்னையால் சிரமப்படுகின்றனர். இதே போல், திருத்தணி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே, முருக்கப்பா நகர் பகுதியிலும் குப்பையை கொட்டி எரிக்கின்றனர். எனவே, கலெக்டர் தலையிட்டு, குப்பையை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். - முனுசாமி, திருத்தணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை