மேலும் செய்திகள்
தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி முகாம் துவக்கம்
22-May-2025
திருத்தணி:திருத்தணி தாலுகா அலுவலகத்தில், நடப்பாண்டிற்கான ஜமாபந்தி விழா நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று இரண்டாவது நாள் ஜமாபந்தி விழாவில், திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் பங்கேற்று, பொதுமக்களிடம் இருந்து 83 மனுக்கள் பெற்றார்.இதில், ஆறு மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, மூன்று பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாவும், மூன்று மாணவர்களுக்கு முதல் பட்டதாரி சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், அத்திமாஞ்சேரிபேட்டையைச் சேர்ந்த சுந்தரேசர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், மாவட்ட அளவில் முதலிடம் மற்றும் இரண்டாம் இடம் பிடித்தனர்.அவர்களை, கலெக்டர் பிரதாப் பாராட்டி, பரிசுகள் வழங்கினார்.
22-May-2025