உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூரில் ரூ.85 லட்சத்தில் வணிக வளாகம் கட்டும் பணி

திருவள்ளூரில் ரூ.85 லட்சத்தில் வணிக வளாகம் கட்டும் பணி

திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சிக்கு வருவாய் பெருக்கும் வகையில், 85 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய வணிக வளாகம் கட்டும் நடந்து வருகிறது.திருவள்ளூர் நகராட்சியில், 27 வார்டுகளில், 82 ஆயிரத்து 185 பேர் வசித்து வருகின்றனர். தற்போது, 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மேலும், 2,500க்கும் மேற்பட்ட கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளன. நகராட்சியில், தற்போது சொத்து வரி, காலிமனை வரி, குடிநீர், பாதாள சாக்கடை கட்டணம், தொழில் வரி என, 10 கோடி ரூபாய் மட்டுமே வருவாய் ஆதாரமாக உள்ளது. தற்போது, ராஜாஜி சாலை மற்றும் பெரியகுப்பம் பகுதியில் உள்ள, 45 கடைகள் மட்டுமே நகராட்சிக்கு வணிக கட்டணம் கிடைக்கிறது.புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணி, வேடங்கிநல்லுாரில் நடைபெற்று வரும் நிலையில், அனைத்து கடைகளும் அங்கு மாற்றப்பட உள்ளது. இதையடுத்து, நகராட்சிக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில், சி.வி.நாயுடு சாலை-நேதாஜி சாலை சந்திப்பில் உள்ள, ராஜம்பாள் பூங்கா இடத்தில், 85 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய வணிக வளாகம் கட்டும் பணி துவங்கி உள்ளது.இங்கு மொத்தம், 15 கடைகள், மூன்று மாதத்திற்குள் பணி நிறைவு பெற்று, வாடகைக்கு விடப்படும் என, நகர்மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி