உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கட்டுமான பணியில் இருந்த ஊழியர் தவறி விழுந்து பலி

கட்டுமான பணியில் இருந்த ஊழியர் தவறி விழுந்து பலி

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே கட்டுமான பணியில் இருந்த, 50 வயது ஊழியர், தவறி விழுந்து பலியாமார். திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர், 50. கட்டட பணி செய்து வரும் இவர், நேற்று முன்தினம், தனது மகள் வீட்டின் மாடியில் சாரம் அமைத்து பூச்சு வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, பகல் 12:00 மணியளவில், சாரத்திலிருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை, உறவினர்கள் மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று மாலை 4:00 மணியளவில் உயிரிழந்தார். இதுகுறித்து, அவரது மகன் தினேஷ்குமார் கொடுத்த புகாரின்படி, திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !