உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  காப்பர் கம்பி திருடியவர் கைது

 காப்பர் கம்பி திருடியவர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் காப்பர் கம்பி திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் பூங்கா நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 54. திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மருத்துவ அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் அதிகாலை 1:30 மணியளவில், நிர்வாக துறை அலுவலக அறையில் சத்தம் கேட்பதாக வந்த தகவலின்படி, உடனே அங்கு சென்றார். அப்போது, அங்கு அடையாளம் தெரியாத நபர், காப்பர் குழாய்களை உடைத்து கொண்டிருந்தார். அவரை பிடித்த ராஜ்குமார் விசாரித்ததில், பெரியஎடப்பாளையம் பகுதியைச் சேர்ந்த முரளி, 25, என தெரிய வந்தது. அவரிடமிருந்து, 15 காப்பர் கம்பிகள் பறிமுதல் செய்யப்பட்டன. திருவள்ளூர் நகர போலீசார் முரளியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை