உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  காப்பர் கம்பி திருடியவர் சிக்கினார்

 காப்பர் கம்பி திருடியவர் சிக்கினார்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில், காப்பர் கம்பிகளை திருடிய லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில், 'ஜெயின் ரிசோர்ஸ் ரீசைக்கிளிங்' என்ற பெயரில், தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. நேற்று முன்தினம், சென்னையில் இருந்து லாரி மூலம் காப்பர் கம்பிகள் ஏற்றி வரப்பட்டன. காப்பர் கம்பிகளை இறக்கியதும், வெளியேற காத்திருந்த லாரியை, தொழிற்சாலை காவலாளிகள் சோதனையிட்டனர். அப்போது, 7,000 ரூபாய் மதிப்புள்ள, 10 கிலோ காப்பர் கம்பிகளை, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த லாரியின் ஓட்டுநர் லுார்துசாமி, 35, திருடியது தெரியவந்தது. தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் அளித்த புகாரின்படி, கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து, லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ