உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நாய்கள் தொல்லை அதிகரிப்பு கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்

நாய்கள் தொல்லை அதிகரிப்பு கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்

திருவள்ளூர்,திருவள்ளூர் நகராட்சி கூட்டம், தலைவர் உதயமலர் தலைமையில் நேற்று நடந்தது. துணை தலைவர் ரவி, கமிஷனர் தாமோதரன் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:நகராட்சி வருவாய் பிரிவில் எந்த பணியும் உரிய காலத்தில் நடைபெறுவதில்லை. பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் அளித்தும், அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. வரி வசூலிப்பதில் செலுத்தும் ஆர்வத்தை, மக்கள் அளிக்கும் புகார்களை தீர்ப்பதிலும் காட்ட வேண்டும்.புங்கத்துார் உட்பட நகரின் பல்வேறு பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. பகுதிவாசிகளை நாய்கள் துரத்தி கடிப்பதால், பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். தெரு நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.வடக்கு ராஜவீதியில் கழிவுநீர் கால்வாய் திறந்தநிலையில் உள்ளதால், சிறுபாலம் அமைக்க வேண்டும். நகராட்சி பராமரிப்பில் உள்ள சிறு தெருக்களில் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.'கவுன்சிலர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்' என, நகராட்சி தலைவர் உறுதியளித்தார். இக்கூட்டத்தில், நகராட்சி பகுதிகளில் மேம்பாட்டு பணிகள் உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி