உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சேதமான வாட்டர் டேங்க் சாலை மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம்

சேதமான வாட்டர் டேங்க் சாலை மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம்

ஆவடி:ஆவடி மாநகராட்சி, 41வது வார்டு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு செக்டர் - 1 உள்ளது. அதன் சுற்றுவட்டாரத்தில், 3 பிரதான சாலை மற்றும் வாட்டர் டேங்க் சாலையில் 1,500 வீடுகள் மற்றும் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி செயல்படுகிறது. இங்குள்ள வாட்டர் டேங்க் சாலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தார் சாலை அமைக்கப்பட்டது.தற்போது, கடந்த ஓராண்டாக இந்த சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால், இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து, விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், பள்ளத்தில் மழைநீர் தேங்கி, குட்டை போல் காட்சி அளிக்கிறது. அதேபோல், மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ள பிரதான சாலையும், சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறி, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் காட்சியளிக்கிறது. இதனால், பள்ளி மாணவ - மாணவியர் பள்ளத்தில் தடுமாறி விழுந்து அவதிப்படுகின்றனர்.சேதமடைந்த இரு சாலைகளையும், கடந்த மாதம் மாநகராட்சி கமிஷனர் கந்தசாமி பார்வையிட்டார். இருப்பினும் இன்று வரை, சாலையை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த இரு நாட்களுக்கு முன், வாட்டர் டேங்க் சாலையில் உள்ள குப்பை கிடங்கில், சாய்வு தளம் அமைக்கும் பணி நடந்தது. அப்போது, சாலையை செப்பனிட பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்தனர்.ஆனால், பணி முடிந்ததும் ஒப்பந்ததாரர் அதை கண்டுகொள்ளவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள், இவ்விரு சாலைகளையும் விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை