மேலும் செய்திகள்
சோழவரத்தில் காவலரை தாக்கிய இருவர் கைது
22-Jul-2025
சோழவரம்:ஆத்துாரில் அடுத்தடுத்து மர்மமான முறையில், நாய்கள் இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சோழவரம் அடுத்த ஆத்துார் கிராமத்தில், ஏராளமான தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. நேற்று சில தெருநாய்கள் திடீரென மயங்கி விழுந்தன. அடுத்த சில நொடிகளில் துடிதுடித்து இறந்தன. இதுபோன்று மூன்று நாய்கள் இறந்ததால், கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தெருநாய்களின் தொல்லையை பொறுக்காமல் மர்மநபர்கள், அவற்றிற்கு விஷம் வைத்து கொலை செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. நாய்கள் அடுத்தடுத்து இறந்த சம்பவத்தை தொடர்ந்து, சோழவரம் காவல் நிலையத்தில் கிராம மக்கள் புகார் அளித்தனர். மேலும், நாய்களின் உடல்களை கைப்பற்றி, மருத்துவ குழுவினர் மூலம் பிரேத பரிசோதனை செய்து விசாரிக்க வேண்டும் என, கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
22-Jul-2025