மேலும் செய்திகள்
வாய்க்காலில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு
25-Jan-2025
பள்ளிப்பட்டு, பள்ளிப்பட்டு ஒன்றியம், கொத்தகுப்பம் ஊராட்சிக்கு உரிய இடத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இருந்தது. இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை எந்தவித முன்னறிவிப்பும், அனுமதியும் இன்றி, கொத்தகுப்பத்தைச் சேர்ந்த பிரசன்னா என்பவர் இடித்து தள்ளி உள்ளார்.இது குறித்து பள்ளிப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் மெல்கிராஜா சிங், பொதட்டூர்பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார்.இந்நிலையில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இடித்து அகற்றியவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, பள்ளிப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே நேற்று, கொத்தகுப்பம் ஊராட்சியைச் சேர்ந்த பகுதிவாசிகள், விவசாயிகள் சங்கத்தினருடன் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.உடன், சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிப்பட்டு போலீசார், உரிய அனுமதி இன்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 28 பேரை கைது செய்து, சமுதாயக்கூடத்தில் அடைத்து வைத்தனர்.
25-Jan-2025