உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கணினி பட்டா வழங்கக்கோரி தேவம்பட்டு கிராம மக்கள் மனு

கணினி பட்டா வழங்கக்கோரி தேவம்பட்டு கிராம மக்கள் மனு

பொன்னேரி:கணினி பட்டா வழங்கக்கோரி, தேவம்பட்டு கிராம மக்கள், பொன்னேரி சப் - கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் நேற்று மனு அளித்தனர். பொன்னேரி தாலுகாவிற்கு உட்பட்ட தேவம்பட்டு கிராமத்தில் உள்ள அரசு நிலத்தில், 80 குடும்பங்கள் மூன்று தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். இதில், சிலருக்கு தோராய வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டு உள்ளன. இவர்கள், கணினி பட்டா கேட்டு நீண்டகாலமாக காத்திருக்கின்றனர். பொன்னேரி தாசில்தார், கலெக்டர் என, பல்வேறு தரப்பினரிடம் மனு அளித்தும், கணினி பட்டா கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள், கோரிக்கை மனுக்களுடன் நேற்று பொன்னேரி சப் - கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர். இது தொடர்பாக, அதிகாரிகளிடம் முறையிட்டு மனு அளித்தனர். அவர்கள் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தேவம்பட்டு கிராமத்தில், தோராய வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டோருக்கு, முறையான கணினி பட்டா வழங்கப்படவில்லை. சிலருக்கு, இதுவரை வீட்டுமனை பட்டாவும் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. கலெக்டர், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளிடம், பலமுறை மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, அனைவருக்கும் கணினி பட்டா வழங்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !