உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பாழாகும் அரசு கட்டடங்கள் ஸ்ரீகாளிகாபுரத்தில் அவலம்

பாழாகும் அரசு கட்டடங்கள் ஸ்ரீகாளிகாபுரத்தில் அவலம்

ஆர்.கே.பேட்டை:ஸ்ரீகாளிகாபுரத்தில் அரசு பள்ளி எதிரே அமைந்துள்ள நுாலகம் உள்ளிட்ட அரசு கட்டடங்கள் பயனின்றி வீணாகி வருகின்றன. இதனால், சமூக ஆர்வலர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.கே.பேட்டை ஒன்றியம் ஸ்ரீகாளிகாபுரம் அரசு தொடக்க பள்ளியை ஒட்டி, ஊராட்சி நுாலக கட்டடம், கிராம சுகாதார மையம், ஊராட்சி சேவை மைய கட்டடங்கள் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக இக்கட்டடங்கள் பராமரிப்பு மற்றும் பயன்பாடின்றி சீரழிந்து வருகின்றன. பெரும்பாலான ஊராட்சிகளில் கிராம சேவை மைய கட்டடங்கள் பயனின்றி வீணாகி வருகின்றன. ஆனால், அரசு தொடக்க பள்ளி எதிரே உள்ள நுாலகம் பயனின்றி கிடப்பது தான் சமூக ஆர்வலர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நுாலக கட்டடத்திற்கு, 'அறிவை வளர்க்கும் நுாலகம்' என, பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, நுாலக கட்டடம் உள்ளிட்ட அனைத்து அரசு கட்டடங்களையும் சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை