உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அகூரில் குடிநீர் தட்டுப்பாடு

அகூரில் குடிநீர் தட்டுப்பாடு

திருத்தணி:திருத்தணி ஒன்றியம், அகூர் காலனியில், ஏழு தெருக்களில் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியினருக்காக மூன்று மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் வாயிலாக தெருக்குழாய்களில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.இதுதவிர, நான்கு குடிநீர் தொட்டிகளுக்கு மின்மோட்டார் வாயிலாக தண்ணீர் நிரப்பப்பட்டு குடிநீர் வழங்கப்படுகிறது. இந்நிலையில், 15 நாட்களாக அகூர் காலனி பகுதியினருக்கு தெருக் குழாய் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் இருந்தும், பம்ப் ஆப்ரேட்டர்கள் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு தண்ணீர் நிரப்பி தெருக்குழாய்கள் வாயிலாக வினியோகம் செய்வதில்லை. இதனால் குடிநீருக்காக மக்கள் கடும் சிரமப்படுகின்றனர்.தற்போது மக்கள், டிராக்டர் வாயிலாக குடிநீர் பணம் கொடுத்தும் சிலர் வாங்கி உபயோகப்படுத்துகின்றனர். அப்பகுதி மக்கள் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் பம்ப் ஆப்ரேட்டர்கள் அலட்சியம் குறித்து பலமுறை ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை இல்லை.இதே நிலை தொடர்ந்தால், குடிநீர் கேட்டு, அகூர் காலனி மக்கள் ஒன்றிய அலுவலகம் முற்றுகை மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்த போவதாகவும் அப்பகுதியினர் ் தீர்மானித்துள்ளனர்.எனவே, கலெக்டர் நடவடிக்கை எடுத்து, சீரான முறையில் குடிநீர் வழங்க வேண்டும் என, அகூர் காலனியினர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !