உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அலுமினிய ஸ்கிராப் திருடிய டிரைவர் கைது

அலுமினிய ஸ்கிராப் திருடிய டிரைவர் கைது

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில், ‛சுமங்கலா மெட்டல்' என்ற பெயரில் தனியார் அலுமினிய தொழிற்சாலை இயங்கி வருகிறது. அதில், அண்ணாமலைச்சேரி கிராமத்தைச் சேர்ந்த பாலு, 45, என்பவர், லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார்.இவர், ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து, மூலப்பொருளான அலுமினிய ஸ்கிராப் ஏற்றி வரும் போது, 13,000 ரூபாய் மதிப்புள்ள, 130 கிலோ அலுமினிய ஸ்கிராப்பை திருடி விற்றுள்ளார்.இது குறித்து, தொழிற்சாலை நிர்வாகம் அளித்த புகாரின்படி, கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசில் வழக்கு பதிந்து, டிரைவர் பாலுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை