உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கல்வித்துறை போட்டிகள் ஒத்திவைப்பு

கல்வித்துறை போட்டிகள் ஒத்திவைப்பு

சென்னை:பள்ளிக் கல்வித்துறையின், வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள், மழையால் ஒத்திவைக்கப்பட்டன.அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில், தி.நகரில் உள்ள ஜி.ஆர்.டி., பள்ளி சார்பில், வருவாய் மாவட்ட அளவிலான, பால் பேட்மின்டன் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.நேற்று, ஆடவருக்கான வடசென்னை மாவட்ட பால் பேட்மிண்டன் போட்டிகள், அம்பத்துார் சேது பாஸ்கரா பள்ளியிலும்; தென் சென்னைக்கான போட்டிகள், மாம்பலம் ஜெயகோபால் கரோடியா இந்து பள்ளியிலும் நடக்க இருந்தது. தொடர் மழையால், நேற்றை போட்டிகள் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டன. அட்டவணைப்படி இன்று, மாணவியருக்கான போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.அதேபோல், இன்று தென் சென்னை மாவட்டத்திற்கான கால்பந்து போட்டி, கீழ்ப்பாக்கம் நேரு பார்க் மைதானத்திலும்; வடசென்னை மாவட்டத்திற்கான கால்பந்து போட்டி, பெரம்பூர் டான்பாஸ்கோ பள்ளியும் நடக்க உள்ளது. இன்றும் மழை தொடர்ந்தால் போட்டிகள் ஒத்திவைக்கப்படலாம் என, ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ