அடிக்கடி எஸ்கலேட்டர் பழுது திருவள்ளூரில் முதியோர் அவதி
திருவள்ளூர் : திருவள்ளூர் ரயில் நிலைய நடைமேடையில், 'எஸ்கலேட்டர்' அடிக்கடி பழுதாகி நின்று விடுவதால் முதியோர் கடும் அவதிப்படுகின்றனர்.திருவள்ளூர் மாவட்ட தலைநகரான திருவள்ளூரில் ரயில் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, பெங்களூரு, கோவை, உள்ளிட்ட 9 விரைவு ரயில்கள் மற்றும் தினமும் 250க்கும் மேற்பட்ட மின்சார விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் ஒன்றரை லட்சம் பேர் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.பயணியர் வசதிக்காக, நடைமேடை எண்.2 - 3ல் 'எஸ்கலேட்டர்' அமைக்கப்பட்டு உள்ளது. வயதானோர், நோயாளிகள் மற்றும் பெண்கள் உள்ளிட்டோரும், அதிக சுமையுடன் வரும் பயணியரும் இதனால் பயன் அடைந்து வருகின்றனர்.இந்த நிலையில், 'எஸ்கலேட்டர்' அடிக்கடி பழுதாகி, இயங்காமல் நின்று விடுகிறது. இதனால் பயணியர் சிரமத்துடன் 'எஸ்கலேட்டர்' படிக்கட்டுளில் சிரமத்துடன் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, ரயில்வே அதிகாரிகள், இங்குள்ள 'எஸ்கலேட்டரை' உரிய முறையில் பராமரித்து தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ரயில் பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.